/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தியாகதுருகத்தில் தி.மு.க., பொதுக்கூட்டம் தியாகதுருகத்தில் தி.மு.க., பொதுக்கூட்டம்
தியாகதுருகத்தில் தி.மு.க., பொதுக்கூட்டம்
தியாகதுருகத்தில் தி.மு.க., பொதுக்கூட்டம்
தியாகதுருகத்தில் தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : செப் 23, 2025 09:30 PM

தியாகதுருகம்;தியாகதுருகத்தில் தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
தி.மு.க., மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி, கனகராஜ், பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அய்யனார், அசோக்குமார், நகர செயலாளர் சுப்புராயலு, பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன், பேரூர் செயலாளர் ஜெய்கணேஷ், ஒன்றிய சேர்மன் தாமோதரன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு குறித்து கூட்டம் நடந்தது. திராவிட இயக்க எழுத்தாளர் டான்அசோக், கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநர்கிள்ளி, தலைமை கழக பேச்சாளர் நாகநந்தினி, மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், ஒன்றிய சேர்மன்கள் வடிவுக்கரசி சுப்ரமணியன், அஞ்சலாட்சி அரசகுமார், துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை உட்பட நிர்வாகிகள் பலர் திரளாக பங்கேற்றனர். மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் நன்றி கூறினார்.