/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சியில் காங்., கையெழுத்து இயக்கம் கள்ளக்குறிச்சியில் காங்., கையெழுத்து இயக்கம்
கள்ளக்குறிச்சியில் காங்., கையெழுத்து இயக்கம்
கள்ளக்குறிச்சியில் காங்., கையெழுத்து இயக்கம்
கள்ளக்குறிச்சியில் காங்., கையெழுத்து இயக்கம்
ADDED : செப் 23, 2025 09:35 PM

கள்ளக்குறிச்சி, ; தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய பா.ஜ., அரசை கண்டித்து காங்., சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் இளவரசன், சரண்ராஜ், தனபால், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்தமிழ் கண்ணன், துரைராஜ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், துணை தலைவர்கள் காசிலிங்கம், சீனிவாசன், இதயத்துல்லா முன்னிலை வகித்தனர்.
நகர தலைவர் குமார் வரவேற்றார். கள்ளக்குறிச்சி காங்., துணைத்தலைவர் மணிரத்தினம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். ஓட்டு திருட்டு தடுக்க தவறிய இந்திய தேர்தல் ஆணையத்தையும், மத்திய பா.ஜ., அரசை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடந்தது.
முன்னாள் சேர்மன் சீனிவாசன், முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா, மாவட்ட தலைவர்கள் கலியமூர்த்தி, பெரியசாமி, ரகோத்தமன், தங்கத்தமிழன், வட்டார தலைவர்கள் பெரியசாமி, கிருபானந்தம், அபுல்கலாம் ஆசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொதுச்செயலாளர் அசோக் நன்றி கூறினார்.