ADDED : மே 30, 2025 04:14 AM

திருக்கோவிலுார்; ஜி.அரியூரில் மகளிர் அரசு கலைக்கல்லூரி துவங்க இந்திய கம்யூ., கட்சியின் திருக்கோவிலுார் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருக்கோவிலுார் ஒன்றிய இந்திய கம்யூ., கட்சியின் 6வது மாநாடு திருக்கோவிலுார் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
மாவட்ட குழு உறுப்பினர் வேலு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து வாழ்த்தி பேசினார்.
மாவட்ட செயலாளர் ராமசாமி சிறப்புரையாற்றினார். திருக்கோவிலுார் மேற்கு ஒன்றிய செயலாளராக ரவியும், கிழக்கு ஒன்றிய செயலாளராக அஞ்சாமணியும் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கலியபெருமாள், நகர செயலாளர் கிப்ஸ், பஷீர் அகமது உள்ளிட்டோர் பேசினர்.
ஜி.அரியூர் கிராமத்தில் மூடப்பட்டுள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அரசு மகளிர் கலை கல்லுாரி துவக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.