Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கட்டுமானப் பணியில் முத்திரை பதிக்கும் பழனியப்பா குரூப்ஸ்

கட்டுமானப் பணியில் முத்திரை பதிக்கும் பழனியப்பா குரூப்ஸ்

கட்டுமானப் பணியில் முத்திரை பதிக்கும் பழனியப்பா குரூப்ஸ்

கட்டுமானப் பணியில் முத்திரை பதிக்கும் பழனியப்பா குரூப்ஸ்

ADDED : அக் 01, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
வீடு கட்டுமான பொருட்களை ஒரே இடத்தில் குறைந்த விலையில் வாங்குவதற்கு சிறந்த இடம் பழனியப்பா டிரேடர்ஸ்தான் என அதன் நிர்வாகி வாஞ்சிநாதன் தெரிவிக்கின்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

'பழனியப்பா பில்டர்ஸ் அண்ட் எம் சாண்ட்' விற்பனை நிலையம், வீடு கட்டுவதற்கு அடித்தளம் இடுவதில் இருந்து, கட்டுமானப் பணியை நிறைவு செய்து, வண்ணப்பூச்சு வரை தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் விற்பனை செய்கிறோம்.

மணம்பூண்டி, திருவண்ணாமலை மெயின் ரோட்டில் உள்ள எங்கள் அலுவலகத்தில் இருந்து ஆர்டரின் பேரில் எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட தரமான எம் சாண்ட், ஜல்லி, கான்கிரீட் கலவைகள், பிரிக்ஸ் உள்ளிட்டவை குறிப்பிட்ட நேரத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு உடனுக்குடன் எங்கள் சொந்த வாகனத்திலேயே அனுப்பி வைக்கின்றோம்.

இதனால், குறைவான விலையில் எங்களால் தரமான பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது.

தேவனுார் கூட்டு சாலை அருகே இருக்கும் பழனியப்பா டிரேடர்ஸ் ஷோரூமில் டைல்ஸ், ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிகல்ஸ், ஸ்டீல், சிமென்ட், பாத்ரூம் பிட்டிங், பெயிண்ட், பிளைவுட், அலுமினியம் ரூபிங் ஷீட்ஸ், கிளாஸ் உள்ளிட்டவை தரமாகவும், குறைந்த விலையிலும் விற்பனை செய்கிறோம்.

பழனியப்பா டிரான்ஸ்போர்ட் மூலம் குறைந்த வாடகையில் மணல், கிராவல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கின்றோம்.

திருவண்ணாமலை, பழையனுாரில் இயங்கும் எர்த் மூவர்ஸ் அண்ட் கிரேன் சர்வீஸ் மூலம் குறைந்த விலையில் புளூ மெட்டல் விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் கனவு இல்லத்தை குறைந்த விலையில் நிஜ இல்லமாக கட்டி முடிக்க எங்கள் பழனியப்பா பில்டர்ஸ் என்றென்றும் துணை நிற்கும்.

இவ்வாறு வாஞ்சிநாதன் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us