/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசம்பட்டு கிராமத்தில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி அரசம்பட்டு கிராமத்தில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி
அரசம்பட்டு கிராமத்தில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி
அரசம்பட்டு கிராமத்தில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி
அரசம்பட்டு கிராமத்தில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி
ADDED : செப் 18, 2025 11:03 PM

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே நள்ளிரவில் பெய்த கனமழையால் அரசம்பட்டு கிராமத்தில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாத நிலையில் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் அரசம்பட்டு கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வீட்டில் இருந்த துணிமணிகள், தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மழை நீரில் நனைந்து சேதமடைந்தன.
அரசம்பட்டு கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்வதற்கு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.