/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விளையாட்டில் வென்ற மாணவர்களுக்கு பரிசு விளையாட்டில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
விளையாட்டில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
விளையாட்டில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
விளையாட்டில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : செப் 25, 2025 04:53 AM

திருக்கோவிலுார்: விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின், எனது இளைய பாரதம் சார்பில், திருக்கோவிலுார் ஒன்றிய அளவிலான மாணவர்களுக்கு விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் வேலு தலைமை தாங்கினார். டி.கே.மண்டபம் அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் தங்கதுரை வரவேற்றார்.
தொழிற்சங்க தலைவர் சரவணன் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார்.
உடற்கல்வி ஆசிரியர் சூசைநாதன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அன்பின் வழி அறப்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் அர்ச்சனா நன்றி கூறினார்.