/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கோரிக்கை: சின்னசேலம் பகுதியில் உலர்களம் அமைக்க விவசாயிகள்... நெடுச்சாலையில் உலர்த்துவதால் வாகன ஓட்டிகள் அவதி கோரிக்கை: சின்னசேலம் பகுதியில் உலர்களம் அமைக்க விவசாயிகள்... நெடுச்சாலையில் உலர்த்துவதால் வாகன ஓட்டிகள் அவதி
கோரிக்கை: சின்னசேலம் பகுதியில் உலர்களம் அமைக்க விவசாயிகள்... நெடுச்சாலையில் உலர்த்துவதால் வாகன ஓட்டிகள் அவதி
கோரிக்கை: சின்னசேலம் பகுதியில் உலர்களம் அமைக்க விவசாயிகள்... நெடுச்சாலையில் உலர்த்துவதால் வாகன ஓட்டிகள் அவதி
கோரிக்கை: சின்னசேலம் பகுதியில் உலர்களம் அமைக்க விவசாயிகள்... நெடுச்சாலையில் உலர்த்துவதால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 04, 2025 02:34 AM

சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதார தொழிலாக விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் விவசாய கூலி தொழில உள்ளது. இப்பகுதியில் முக்கிய நீர் தேக்கம் ஏதும் இல்லாததால் பருவ மழையின் போது ஏரிகளில் நிரம்பும் தண்ணீரை நம்பி சாகுபடி நடக்கிறது. சின்னசேலம் பகுதி தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதி என்பதால், விவசாயிகள் தரைக்கிணறு மற்றும் போர்வெல் அமைத்து சாகுபடி செய்து வருகின்றனர்.
கிணற்று பாசன விவசாயிகள் மரவள்ளி, மக்காசோளம், கரும்பு, கீரை, காய்கறிகள், பூக்கள் போன்ற பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி முறையில் பருவ மழையை நம்பி பருத்தி, எள், கம்பு, சோளம், போன்ற சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இதனால் ஒரே நேரத்தில் விதைப்பு பணி துவங்குவதுபோல், அறுவைடை பணிகளும் ஒரே நேரத்தில் நடக்கிறது.
இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த தானியங்களை உலர்த்த போதிய இடவசதி இன்றி மிகுந்த சிறுமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக எள், கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவைகளை பிரித்தெடுக்க பல நாட்கள் அதனை வெயிலில் உலர்த்த வேண்டிய நிலை உள்ளது.
இவைகளை பிரித்தெடுக்க சிமென்ட் தளங்கள் மிகவும் அவசியம். சின்னசேலம் பகுதியில் போதிய அளவு கான்கிரீட் தானிய உலர்களங்கள் இல்லாததால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த தானியங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் கொட்டி உலர்த்த வேண்டிய அவல நிலை உள்ளது.
தானியங்களை தேசிய நெடுஞ்சாலையில் உலர்த்துவதால் வாகன விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. சர்விஸ் சாலை முழுவதும் நீண்ட துாரத்திற்கு மக்கா சோளம் உலர்த்தப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக கனரக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்கள் பழுது ஏற்பட்டாலும் அவசர தேவைகளுக்கும் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால் இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
விவசாய கழிவுகளும் தேசிய நெடுச்சாலையில் குவித்து வைத்து, தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் ஏற்படும் அதிகப்படியான புகை மாசு ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு எதிர்வரும் வாகனங்களை பார்ப்பதற்கும் சிரமம் ஏற்படுகிறது. சாலைகளில் தானியங்கள் உலர்த்துவதால் விவசாயிகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளது.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சின்னசேலம் பகுதியில் போதிய தானிய உலர் களங்களை ஏற்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலைகளில் தானியங்கள் உலர்த்துவதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.