ADDED : செப் 25, 2025 11:45 PM

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகர் ரோட்டரி நுாற்றாண்டு மண்டபத்தில் முப்பெரும் விழா நடந்தது.
தேசிய ஆசிரியர் தின விழா, ரோட்டரி சங்க பொறியாளர்கள் கவுரவிப்பு, அரசால் பாராட்டப்பட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு என நடந்த முப்பெரும் விழாவிற்கு, ரோட்டரி சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நியமன ஆளுநர் செந்தில்குமார், மாவட்ட சேர்மன் ரேவதி, துணை ஆளுனர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற சி.இ.ஓ., கார்த்திகா, ரோட்டரி மாவட்ட ஆளுனர் சிவசுந்தரம் ஆகியோர் மாவட்டம் முழுதும் பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி அதிகரிக்க காரணமாக இருந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், பசுமைப் படை ஆசிரியர் என 26 பேர், பொறியாளர்கள் 5 பேர், சமூக சேவை பிரதிநிதிகள் 2 பேர் என 33 பேருக்கு சான்றிதழ், நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.