/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கல்வி உதவித் தொகை: விண்ணப்பம் வரவேற்புகல்வி உதவித் தொகை: விண்ணப்பம் வரவேற்பு
கல்வி உதவித் தொகை: விண்ணப்பம் வரவேற்பு
கல்வி உதவித் தொகை: விண்ணப்பம் வரவேற்பு
கல்வி உதவித் தொகை: விண்ணப்பம் வரவேற்பு
ADDED : பிப் 02, 2024 04:07 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு படிப்பவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். நடப்பாண்டில் புதிய மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் 'ஸ்டூடண்ட் லாகின்' சென்று ஆதார் எண் அளித்து 'கே.ஓய்.சி., வெரிபிகேஷன்' செய்ய வேண்டும்.
கல்வி உதவித்தொகை இணையதளம் புதியவர்களுக்கு 1.2.2024 முதல் செயல்பட துவங்கும். பதிவதற்கான விண்ணப்பங்கள் வரும் 29ம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்
கூடுதல் விபரங்களுக்கு தங்கள் கல்லுாரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


