ADDED : பிப் 11, 2024 09:51 PM
ரிஷிவந்தியம் : பாவந்துாரில் தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ராணி,46; இவரது மூத்த மகன் ஜெயராஜ் கடந்த 10ம் தேதி பணம் கேட்டு தாய் ராணியை தொந்தரவு செய்தார்.
பணம் தர மறுத்ததால், தாய் ராணியை தாக்கிவிட்டு, பீரோவில் இருந்த துணிகளை கிழித்து, பணம் தரவில்லையெனில் கொலை செய்துவிடுவேன் என மகன் ஜெயராஜ் மிரட்டியுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து, ஜெயராஜ்,27; என்பவரை கைது செய்தனர்.