/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இளையனார்குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இளையனார்குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
இளையனார்குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
இளையனார்குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
இளையனார்குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : செப் 04, 2025 07:00 AM

ரிஷிவந்தியம் : இளையனார்குப்பத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 486 மனுக்கள் பெறப்பட்டன.
வாணாபுரம் அடுத்த இளையனார்குப்பத்தில் நடந்த முகாமிற்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கலால் உதவி ஆணையர் செந்தில்குமார், வாணாபுரம் தாசில்தார் வெங்கடேசன், ஒன்றிய துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கி கூறி, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில், வருவாய்துறை சார்ந்து 128 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 38, குடிமைப்பொருள் 6, ஊரக வளர்ச்சி 52, மின்சாரத்துறை 2, மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக 260 என மொத்தமாக 486 மனுக்கள் பெறப்பட்டன.