/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சூளாங்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சூளாங்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சூளாங்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சூளாங்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சூளாங்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : செப் 25, 2025 04:22 AM

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். வாணாபுரம் தாசில்தார் வெங்கடேசன் வரவேற்றார். முகாமின் சிறப்பம்சங்கள், விண்ணப்பிக்கும் முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், மகளிர் உரிமைத்தொகை, நிலம் அளவீடு உட்பட பொதுமக்கள், மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில், ஜாதிச்சான்று, சிறு, குறு விவசாய சான்று, முதியோர் உதவித்தொகை தொடர்பாக 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கலால் உதவி ஆணையர் செந்தில்குமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், ஊராட்சி தலைவர் கோமதிசுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் சுசீலா பாண்டுரங்கன், பொதுக்குழு உறுப்பினர் ராஜி, நிர்வாகிகள் செல்வம், ரஞ்சித், வருவாய் ஆய்வாளர் பிரபு, வி.ஏ.ஓ.,க்கள் விஜயபிரபாகரன், பாக்யராஜ், மணிகண்டன் கலந்து கொண்டனர்.