ADDED : மே 29, 2025 11:40 PM

சங்கராபுரம்: சங்கராபுரம் கிளை நுாலகத்தில் கோடை கால பயிற்சி முகாம்,15 நாட்கள் நடந்தது. இதையடுத்து நேற்று பயிற்சி நிறைவு நாள் விழா நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் குசேலன் வரவேற்றார். தேவபாண்டலம் கார்குழலி தமிழ்ச்சங்க தலைவர் தாமோதரன் முன்னிலை வகித்தார். நுாலகர் நந்தினி வரவேற்றார்.
ஓய்வு பெற்ற மின் வாரிய செயற்பொறியாளர் செல்வமணி,பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். சங்கராபுரம் தமிழ் படைப்பாளர் சங்க துணை செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.