ADDED : செப் 13, 2025 07:06 AM

சங்கராபுரம் : கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் கிடங்கன் பாண்டலம் ஊராட்சி துவக்கப் பள்ளியில், ஆசிரியர் தின விழா, பாரதியார் நினைவு தினம், குறளும் பொருளும் நிகழ்வு என முப்பெரும் விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் பாப்பாத்தி தலைமை தாங்கினார். முத்தமிழ் சங்க மாவட்டத் தலைவர் முருககுமார் வரவேற்றார். பள்ளி ஆசிரியர் ராஜகுமாரி, அரிமா சங்க மாவட்டத் தலைவர் வேலு, தமிழ்ப் படைப்பாளர் சங்க செயலாளர் சக்திவேல், அறிவுடை நம்பி முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். பாரதியார் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.