/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பஸ்சில் பயணித்த பெண்ணிடம் நகை பணம் 'அபேஸ்' பஸ்சில் பயணித்த பெண்ணிடம் நகை பணம் 'அபேஸ்'
பஸ்சில் பயணித்த பெண்ணிடம் நகை பணம் 'அபேஸ்'
பஸ்சில் பயணித்த பெண்ணிடம் நகை பணம் 'அபேஸ்'
பஸ்சில் பயணித்த பெண்ணிடம் நகை பணம் 'அபேஸ்'
ADDED : ஜூலை 02, 2025 11:49 PM
சின்னசேலம் : சின்னசேலத்தில் பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணிடம், நகை பணம் திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மனைவி மல்லிகா, 45; இவர், கடந்த மாதம் 26ம் தேதி, பகல் 3:00 மணிக்கு, சின்னசேலம் அடுத்த தோட்டப்பாடி கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு புறப்பட்டார். இதற்காக சின்னசேலம் பஸ் நிலையத்திலிருந்து, மினி பஸ்சில் சென்றார். பஸ்சில் நின்றிருந்த மல்லிகா, அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தனது பையை கொடுத்தார்.
பையில் ரூ. 30 ஆயிரம் பணம், 2 கிராம் தங்க நகை இருந்தது. பஸ் சிறிது துாரம் சென்றதும், பஸ்சில் பையுடன் அமர்ந்திருந்த பெண் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்