/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 184 பயனாளிக்கு 8.76 கோடியில் நலத்திட்ட உதவி 184 பயனாளிக்கு 8.76 கோடியில் நலத்திட்ட உதவி
184 பயனாளிக்கு 8.76 கோடியில் நலத்திட்ட உதவி
184 பயனாளிக்கு 8.76 கோடியில் நலத்திட்ட உதவி
184 பயனாளிக்கு 8.76 கோடியில் நலத்திட்ட உதவி
ADDED : ஜூலை 31, 2024 02:04 AM
காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்கு உட்பட்ட, வல்லம்-வடகால் ஊராட்சியில், 706 கோடி ரூபாய் மதிப்பில், 18,720 தொழிலாளர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட விடுதியை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார்.
இதையடுத்து, காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 2024- - 25ம் கல்வியாண்டில், பிளஸ் 1 மாணவர்களுக்கான, இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 8,501 மாணவ - மாணவியருக்கு அமைச்சர் சைக்கிள் வழங்கினார்.
தொடர்ந்து, கலெக்டர் வளாக கூட்டரங்கில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் மனுக்களை பெறும், குறைதீர் கூட்டம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், 45 மாணவ - மாணவியருக்கு, 5.8 கோடியில் கல்விக்கடனும், மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவியும் என, பல்வேறு துறை சார்பில், மொத்தம் 184 பயனாளிகளுக்கு, 8.76 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.