/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஸ்கூட்டரில் சென்றவர் லாரி மோதி பலி ஸ்கூட்டரில் சென்றவர் லாரி மோதி பலி
ஸ்கூட்டரில் சென்றவர் லாரி மோதி பலி
ஸ்கூட்டரில் சென்றவர் லாரி மோதி பலி
ஸ்கூட்டரில் சென்றவர் லாரி மோதி பலி
ADDED : ஜூலை 26, 2024 11:56 PM
குன்றத்துார்:ஆரணியை சேர்ந்தவர் வெங்கடேசன்,35. இவர் குன்றத்துார் அருகே மாங்காடில் தங்கி பூ மாலை கட்டும் வேலை செய்து வந்தார்.
இவர், நேற்று காலை முனி,40 என்பவருடன், தன் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் குன்றத்துார் நோக்கி சென்றார். கொல்லச்சேரி பகுதியைக் கடந்தபோது பின்னால் வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற வெங்கடேசன் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் அமர்ந்திருந்த சென்ற முனி, காயமடைந்தார். விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.