/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ டூ - வீலரில் சென்றவர் வேன் மோதி பலி டூ - வீலரில் சென்றவர் வேன் மோதி பலி
டூ - வீலரில் சென்றவர் வேன் மோதி பலி
டூ - வீலரில் சென்றவர் வேன் மோதி பலி
டூ - வீலரில் சென்றவர் வேன் மோதி பலி
ADDED : ஜூன் 10, 2024 05:03 AM
பட்டுமுடையார்குப்பம், : உத்திரமேரூர் அடுத்த, இளநகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 50. சமையல் மாஸ்டர். இவர், நேற்று முன் தினம், மாலை 6:00 மணி அளவில், 'டி.வி.எஸ்.,--50' இருசக்கரவாகனத்தில், தக்கோலத்தில் இருந்து பேரம்பாக்கம் நோக்கி சென்றார்.
பேரம்பாக்கத்தில் இருந்து, தக்கோலம் நோக்கி சென்ற மகேந்திரா டூரிஸ்ட் வேன், பட்டுமுடையார்குப்பம் அருகே, இருசக்கர வாகனத்தின் மீது,மோதியது. இந்த விபத்தில், ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சுங்குவார்சத்திரம் போலீசார், ஆறுமுகம் உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வேன் டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.