/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டர்கள் நியமனம் கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டர்கள் நியமனம்
கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டர்கள் நியமனம்
கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டர்கள் நியமனம்
கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டர்கள் நியமனம்
ADDED : ஜூலை 26, 2024 08:28 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்டம், கலெக்டர் நேர்முக உதவியாளர், ஆயத்தீர்வை உதவி இயக்குனர், நிலம் ஆகிய பிரிவுகளுக்கான துணை கலெக்டர்கள் நியமிக்கப்படாமல் காலியாக இருந்தன.
நேற்று முன்தினம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், இப்பணியிடங்களுக்கு துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, கலெக்டரின் நேர்முக உதவியாளராக சத்யா என்பவரும், நிலம் பிரிவுக்கு ஜோதிசங்கர் என்பவரும், சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு பாக்கியலட்சுமி என்பவரும், ஆய்வுக்குழு அலுவலராக பாலமுருகன் என்பவரையும் தமிழக அரசு நியமித்துள்ளது.
ஆயத்தீர்வை உதவி கமிஷனர் பணியிடத்திற்கு யாரையும் நியமிக்காததால், அப்பணியிடம் காலியாக உள்ளது.