Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அவளூர் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா

அவளூர் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா

அவளூர் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா

அவளூர் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா

ADDED : ஜூலை 03, 2024 10:05 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், அவளூர் ஊராட்சியில், 1924ல் துவக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நுாற்றாண்டு விழா நடந்தது.

இதில், மாணவ- - மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கும், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பரிசு வழங்கினார்.

விழாவில், வட்டாரகல்வி அலுவலர் கண்ணன், தலைமை ஆசிரியை பத்மாவதி, ஊராட்சி தலைவர் சித்ரா, முன்னாள் பள்ளி மாணவ - மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us