/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பெட்ரோல் கேனுடன் கவுன்சிலர் போராட்டம் பெட்ரோல் கேனுடன் கவுன்சிலர் போராட்டம்
பெட்ரோல் கேனுடன் கவுன்சிலர் போராட்டம்
பெட்ரோல் கேனுடன் கவுன்சிலர் போராட்டம்
பெட்ரோல் கேனுடன் கவுன்சிலர் போராட்டம்
ADDED : ஜூலை 30, 2024 07:18 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 16வது வார்டு, எஸ்.வி.என்., பிள்ளை குறுக்கு தெருவில், மாநகராட்சி சார்பில், சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சாந்தி துரைராஜ், நேற்று காலை சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடக்கும் இடத்திற்கு வந்தார்.
சாலை அமைக்கும் பணி தரமற்ற முறையில் நடைபெறுகிறது. மாநகராட்சி பொறியாளர் பிரிவு அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்யவில்லை எனக் கூறி, அப்பகுதி மக்கள் சிலருடன் சேர்ந்து, கையில் பெட்ரோல் பாட்டிலுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார், கவுன்சிலர் சாந்தி துரைராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து, அவர் போராட்டத்தை கைவிட்டு சென்றார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.