Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி அதிருப்தி கவுன்சிலர்கள் இரவு முழுதும் போராட்டம்

காஞ்சி அதிருப்தி கவுன்சிலர்கள் இரவு முழுதும் போராட்டம்

காஞ்சி அதிருப்தி கவுன்சிலர்கள் இரவு முழுதும் போராட்டம்

காஞ்சி அதிருப்தி கவுன்சிலர்கள் இரவு முழுதும் போராட்டம்

ADDED : ஜூலை 23, 2024 10:58 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், வரும் 29ம் தேதி, மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் மற்றும் அவர் பதவி மீதான ஓட்டெடுப்பும் நடக்க உள்ளது.

மேயருக்கு எதிராக, 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதற்கிடையே, நிலைக்குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்து கமிஷனர் செந்தில்முருகனிடம் வழங்கிய கடிதத்தை மீண்டும் மேயரிடம் வழங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததால், கவுன்சிலர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.

அதேபோல, கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்கவில்லை. மாநகராட்சி வருகை பதிவேட்டில், கவுன்சிலர்கள் வரவில்லை என அதிகாரிகள் எழுதியதற்கு அதிருப்தி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

வருகைப் பதிவேட்டில் புறக்கணிப்பு என எழுத வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற காரணங்களை முன்வைத்து, கமிஷனர் செந்தில்முருகனை நேற்று முன்தினம் தி.மு.க.,- - அ.தி.மு.க., உள்ளிட்ட கவுன்சிலர்கள், அவரது அறையில் முற்றுகையிட்டனர்.

கமிஷனருடன், கவுன்சிலர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். இதைத் தொடர்ந்து, மாநகராட்சி வளாகத்தில், பந்தல் போட்டு தர்ணா போராட்டத்திலும் ஈடுபடத் துவங்கினர்.

இரவு முழுதும் மாநகராட்சி வளாகத்திலேயே கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்.

இரண்டாம் நாளாக நேற்றும். தர்ணா போராட்டம் நடந்தது. மதியம் 1:00 மணியளவில், தன் அறையில் இருந்த கமிஷனர் செந்தில்முருகனிடம், கவுன்சிலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி முற்றுகையிட்டனர்.

அவரது அறையிலேயே பெண் கவுன்சிலர்கள் பலரும் தரையில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அறைக்குள்ளேயே, கமிஷனர் செந்தில்முருகனுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.

இரண்டாம் நாள் போராட்டம் நேற்றிரவும் தொடர்ந்தது. அதிருப்தி கவுன்சிலர்கள், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனரையும், அமைச்சர் நேருவையும் இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us