/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் பூக்கள் விலை சரிவு மல்லி 250; பன்னீர் ரோஜா 100 காஞ்சியில் பூக்கள் விலை சரிவு மல்லி 250; பன்னீர் ரோஜா 100
காஞ்சியில் பூக்கள் விலை சரிவு மல்லி 250; பன்னீர் ரோஜா 100
காஞ்சியில் பூக்கள் விலை சரிவு மல்லி 250; பன்னீர் ரோஜா 100
காஞ்சியில் பூக்கள் விலை சரிவு மல்லி 250; பன்னீர் ரோஜா 100
ADDED : ஜூலை 30, 2024 07:07 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பூக்கடை சத்திரத்திற்கு பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரோஜா, சாமந்தி உள்ளிட்ட பூக்களும், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள வதியூர், கூரம், சிறுவாக்கம், புரிசை, மூலப்பட்டு, மணியாச்சி, உள்ளிட்ட வட்டாரங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூக்களும், விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில், பரணி கிருத்திகையையொட்டி, நேற்று முன்தினம், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில், கிலோ மல்லிகைப்பூ 500 ரூபாய்க்கும், முல்லை 300, சாமந்தி 300, சம்பங்கி 250, ரோஜா 200 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டது.
ஆடி கிருத்திகையான நேற்று, பெரும்பாலான பூக்களின் விலை வீழ்ச்சியடைந்து இருந்தது.
இதுகுறித்து, பூக்கடை சத்திரம் பூ மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரி முனுசாமி கூறியதாவது:
பரணி கிருத்திகை, ஆடி கிருத்திகையையொட்டி, ஞாயிற்றுகிழமையே பொதுமக்கள் பூக்கள் வாங்க குவிந்ததால், நேற்று முன்தினம் பூக்களின் விலை உயர்ந்து இருந்தது.
இன்று, பூக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் அதிகளவு வராததால், பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால், மல்லிகைப்பூ கிலோ 250, முல்லை 160, சாமந்தி 250, ஜாதிமல்லி 340, சம்பங்கி 100, பன்னீர்ரோஜா 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.