Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை பெற அழைப்பு

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை பெற அழைப்பு

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை பெற அழைப்பு

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை பெற அழைப்பு

ADDED : ஜூலை 26, 2024 01:46 AM


Google News
காஞ்சிபுரம்:தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் செயல் படுத்தப்பட்டுவருகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயனடைந்த பயனாளிகளில், தற்போது 18 வயதை கடந்தும் முதிர்வுத்தொகை பெறாமல் உள்ளனர்.

முதிர்வு தொகை பெறாமல் உள்ள பெண் குழந்தைகள், தாங்கள் விண்ணப்பித்த ஒன்றியத்தில் உள்ள பி.டி.ஓ.,அலுவலகத்தில், விண்ணப்பிக்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட வைப்புத்தொகை பத்திரத்தின் நகல், பெண் குழந்தையின் பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்று சான்றிதழ் நகல், பிறப்பு சான்று நகல், ஆதார் அட்டை நகல், போட்டோ உள்ளிட்ட ஆவணங்களை, சமூகநல விரிவாக்க அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அல்லது கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் நேரில் வந்து சமர்பிக் கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

முதிர்வுத்தொகை, 18 வயது நிரம்பிய பெண் குழந்தையின் பெயரில், தற்போது செயலில் உள்ள வங்கி கணக்கிற்கு மின் பரிவர்த்தனை மூலம் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us