Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூர் கோவில்களில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் கோவில்களில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் கோவில்களில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் கோவில்களில் கும்பாபிஷேகம்

ADDED : ஜூன் 10, 2024 05:02 AM


Google News
உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியம், முருக்கேரியில் கொஞ்சியம்மன் கன்னியம்மன், கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பல்வேறு திருப்பணிகளுடன் புதிதாக கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 7ம் தேதி காலை யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 9:30 மணிக்கு, கோவில் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

 உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சியில் சிறிய அளவில் இருந்த எல்லையம்மன் கோவிலை புதிய வடிவில் புனரமைக்க அப்பகுதியினர் தீர்மானித்தனர். அதன்படி, எடமச்சி மலை அருகே உள்ள அம்புலிகுன்றின் மீது கோவில் கட்டுமான பணி 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, கடந்த 7ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று, காலை 7:30 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us