/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 31, 2024 04:32 AM
திருப்போரூர் : சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு, 38. இவர், மது பழக்கத்திற்கு அடிமையாகி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
எனவே, அவரின் நலன் கருதி, மது பழக்கத்தை கட்டுப்படுத்தி அவரை மீட்கவும், அவரின் உடல்நிலையை சீராக்கவும், அவரது குடும்பத்தினர், கடந்த 28ம் தேதி, வேங்கடமங்கலம் தனியார் மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.
இதையறிந்த மறுவாழ்வு மைய நிர்வாகிகள், அவரை ஆம்புலன்ஸ் வாயிலாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு, ராஜுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக, தாழம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.