/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இரு மாதத்திற்கு பின் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் இரு மாதத்திற்கு பின் இன்று மக்கள் குறைதீர் கூட்டம்
இரு மாதத்திற்கு பின் இன்று மக்கள் குறைதீர் கூட்டம்
இரு மாதத்திற்கு பின் இன்று மக்கள் குறைதீர் கூட்டம்
இரு மாதத்திற்கு பின் இன்று மக்கள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 10, 2024 04:54 AM
காஞ்சிபுரம், : லோக்சபா தேர்தல் கடந்த மார்ச் 16ல், அறிவிக்கப்பட்டது. அன்றைய நாள் முதல், கடந்த வியாழக்கிழமை வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன.
இதனால், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் போன்ற கூட்டங்கள் நடைபெறாமல் இருந்தன.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததால், காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், திங்கட்கிழமையான இன்று, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் தங்களது கோரிக்கை, புகார் மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக மனுவாக கொடுக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.