/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஆடிக்கிருத்திகைக்கு விழா விடுமுறை அளிக்கப்படுமா? ஆடிக்கிருத்திகைக்கு விழா விடுமுறை அளிக்கப்படுமா?
ஆடிக்கிருத்திகைக்கு விழா விடுமுறை அளிக்கப்படுமா?
ஆடிக்கிருத்திகைக்கு விழா விடுமுறை அளிக்கப்படுமா?
ஆடிக்கிருத்திகைக்கு விழா விடுமுறை அளிக்கப்படுமா?
ADDED : ஜூலை 26, 2024 10:36 PM
காஞ்சிபுரம்:முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் முருகன் கோவில்களில், ஆடி கிருத்திகை நாளில் சிறப்பு அபிஷேகம், சுவாமி வீதியுலா, தெப்போற்சவம் உள்ளிட்டவை நடைபெறும்.
இதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில்களுக்கு வருவர். எனவே, மாவட்ட நிர்வாகம் அன்றைய நாளை உள்ளூர் விடுமுறையாக அறிவிப்பர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, ஆடிக்கிருத்திகை நாளான, வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா என, அனைத்து தரப்பு மக்களிடையேயும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில், இளையனார்வேலுார் பாலசுப்பிரமணியர் கோவில் ஆகியவை பிரபலமான கோவில்கள்.
இக்கோவில்களில் ஆடிக்கிருத்திகை நாளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். வெளியூரிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். கடந்தாண்டுகளில் ஆடிக்கிருத்திகை நாளில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆடிக்கிருத்திகை நாளிலும், நடப்பாண்டில் வரதராஜ பெருமாள் கோவில் கருடசேவைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவில்லை. எனவே, வரும் 29ம் தேதி, உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.