பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 30, 2024 07:17 AM
காஞ்சிபுரம்: தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட கிளை சார்பில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி, காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள, இணை இயக்குனர் சுகாதார நலப்பணி அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சியாமளா தேவி தலைமை வகித்தார்.
இதில், மாவட்ட செயலர் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.