Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கிளாம்பாக்கம் பஸ்நிலையம் செல்லாத 11 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிப்பு

கிளாம்பாக்கம் பஸ்நிலையம் செல்லாத 11 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிப்பு

கிளாம்பாக்கம் பஸ்நிலையம் செல்லாத 11 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிப்பு

கிளாம்பாக்கம் பஸ்நிலையம் செல்லாத 11 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிப்பு

ADDED : பிப் 25, 2024 02:18 AM


Google News
சென்னை, கிளாம்பாக்கம் நிலையம் செல்லாமல் வந்த 11 ஆம்னி பேருந்துகளுக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.

முடிச்சூர் அருகே ஆம்னி பேருந்துகளுக்கான வாகன நிறுத்தம் பணி முடியும் வரை, சென்னையின் உள்ளே அந்நிறுவனங்களின் பணிமனைகளுக்கு வந்து செல்ல தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தெற்கு மாவட்டங்கள் நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகள், எக்காரணம் கொண்டும்சென்னை புறவழிச்சாலையில் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய மூன்று இடங்களை தவிர வேறு எங்கும்பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது.

'இதனை மீறி, மேற்கூறிய மூன்று இடங்களை தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணியரை ஏற்றி, இறக்கினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும்' என, போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையே, விதியை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வாகன ஆய்வாளர்கள், போலீசார் அடங்கிய குழுவினர் போரூர், கோயம்பேடு குன்றத்துார், வண்டலுார் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் புறநகர் பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்குள் செல்லாமல் வந்த 11 ஆம்னி பேருந்துகளை மடக்கி பிடித்தனர். இந்த பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து ஆணையரகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு ஆம்னி பேருந்துக்கும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால், ஆம்னி பேருந்துகளின் பர்மிட் ரத்து உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us