/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தமிழ் திறனறி தேர்வில் 231 பேர் 'ஆப்சென்ட்' தமிழ் திறனறி தேர்வில் 231 பேர் 'ஆப்சென்ட்'
தமிழ் திறனறி தேர்வில் 231 பேர் 'ஆப்சென்ட்'
தமிழ் திறனறி தேர்வில் 231 பேர் 'ஆப்சென்ட்'
தமிழ் திறனறி தேர்வில் 231 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : அக் 11, 2025 08:14 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 231 மாணவ - மாணவியர், தமிழ் திறனறி தேர்வு எழுத வரவில்லை என, கல்வித் துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 50 அரசு உயர்நிலைப்பள்ளி, 51 மேல்நிலைப்பள்ளி, 20 அரசு உதவி பெறும் பள்ளிகள் என, மொத்தம் 121 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இதில், 40,000 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும், மாணவ - மாணவியருக்கு நேற்று, தமிழ் திறனறி தேர்வு, தமிழகம் முழுதும் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 15 தேர்வு மையங்களில், 4,910 பேர் திறனறி தேர்வு எழுத ஒதுக்கீடு செய்தனர்.
இதில், 4,679 மாணவ - மாணவியர் தமிழ் திறனறி தேர்வு எழுதினர். மீதம், 231 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இவர்களுக்கு, மேல்நிலைப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை கிடைக்காது என, கல்வித் துறையினர் தெரிவித்தனர்.


