/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி கல்லுாரி மாணவியர் 3 பேர் மாநில கட்டுரை போட்டிக்கு தேர்வு காஞ்சி கல்லுாரி மாணவியர் 3 பேர் மாநில கட்டுரை போட்டிக்கு தேர்வு
காஞ்சி கல்லுாரி மாணவியர் 3 பேர் மாநில கட்டுரை போட்டிக்கு தேர்வு
காஞ்சி கல்லுாரி மாணவியர் 3 பேர் மாநில கட்டுரை போட்டிக்கு தேர்வு
காஞ்சி கல்லுாரி மாணவியர் 3 பேர் மாநில கட்டுரை போட்டிக்கு தேர்வு
ADDED : மே 11, 2025 09:03 PM
காஞ்சிபுரம்:செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில் நடந்தது.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு, கல்லுாரியைச் சேர்ந்த 50 மாணவ - மாணவியர், 'முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கடித இலக்கியம்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டியில் பங்கேற்றனர்.
இப்போட்டியில் காஞ்சிபுரம் சோழன் கல்வியியல் கல்லுாரி மாணவி வரலட்சுமி, முதல் பரிசாக 10,000 ரூபாய் வென்றார்.
காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியைச் சேர்ந்த மாணவியர் நந்தினி இரண்டாம் பரிசாக, 7,000 ரூபாயும், சுதா மூன்றாம் பரிசாக 5,000 ரூபாயும் பரிசு தொகையை வென்றுஉள்ளனர்.
இதன் வாயிலாக, காஞ்சியைச் சேர்ந்த மாணவியர் மூன்று பேரும், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான, கட்டுரை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.