/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் பருவ மழையை சமாளிக்க 6,000 மணல் மூட்டைகள் தயார் காஞ்சியில் பருவ மழையை சமாளிக்க 6,000 மணல் மூட்டைகள் தயார்
காஞ்சியில் பருவ மழையை சமாளிக்க 6,000 மணல் மூட்டைகள் தயார்
காஞ்சியில் பருவ மழையை சமாளிக்க 6,000 மணல் மூட்டைகள் தயார்
காஞ்சியில் பருவ மழையை சமாளிக்க 6,000 மணல் மூட்டைகள் தயார்
ADDED : அக் 09, 2025 11:11 PM

காஞ்சிபுரம்:வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், ஏரிக்கரை உடைந்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, மாவட்டம் முழுதும், 6,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருப்பதாக, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ள 72 இடங்களை, அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
உள்ளாட்சிகள், நீர்வளத்துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறையினர் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வேகவதி ஆற்றை சுத்தம் செய்வது, தைப்பாக்கம் கால்வாய் சுத்தம் செய்வது, கம்ப கால்வாயில் தண்ணீர் செல்ல தேவையான நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகள் நடக்கின்றன.
குறிப்பாக, மழை நேரத்தில் ஏரிக்கரை உடையும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், அதற்காக மணல் மூட்டைகளை தயார் செய்து வருகின்றனர். உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், பாலுச்செட்டிச்சத்திரம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில், மணல் மூட்டைகளை தயார் செய்து வைத்துள்ளனர்.
ஏரிக்கரை உடைந்தால் அவற்றை சரி செய்ய, 6,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


