Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சிபுரம் வைணவ கோவில்களுக்கு 96 பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா

காஞ்சிபுரம் வைணவ கோவில்களுக்கு 96 பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா

காஞ்சிபுரம் வைணவ கோவில்களுக்கு 96 பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா

காஞ்சிபுரம் வைணவ கோவில்களுக்கு 96 பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா

ADDED : அக் 11, 2025 08:22 PM


Google News
காஞ்சிபுரம்:நான்காவது சனிக்கிழமையான நேற்று, 96 மூத்த குடிமக்களை, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், காஞ்சிபுரத்தில் உள்ள வைணவ கோவில்களுக்கு இலவசமாக ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா அழைத்து சென்றனர்.

ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், புரட்டாசி மாத முதல் மூன்று சனிக்கிழமைகளில், 213 மூத்த குடிமக்கள் வைணவ கோவில்களுக்கு உணவுடன் இலவசமாக ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

நான்காவது சனிக்கிழமையான நேற்று, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 96 மூத்த குடிமக்கள், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஆன்மிக சுற்றுலா சென்றனர்.

இதில், காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில், விளக்கொளி பெருமாள் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், பாண்டவ துாதப்பெருமாள் கோவில்ல், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் என, ஐந்து வைணவ கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

மூத்த குடிமக்களுக்கு தேவையான குடிநீர், பிஸ்கட், மருத்துவ வசதி கொண்ட தொகுப்பை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமரதுரை, காஞ்சிபுரம் உதவி ஆணையர் கார்த்திகேயன், கோவில் உதவி ஆணையர் ராஜலட்சுமி, மாநகர தி.மு.க., கவுன்சிலர் கமலக்கண்ணன் ஆகியோர் வழங்கினர்.

கோவில் நிர்வாக அதிகாரிகள் செந்தில்குமார், பூவழகி, மேலாளர் பூங்கொடி, சரக ஆய்வாளர்கள் ஹரி, ரம்யா, சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us