/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூரில் 'அட்மா' திட்ட ஆலோசனை கூட்டம் உத்திரமேரூரில் 'அட்மா' திட்ட ஆலோசனை கூட்டம்
உத்திரமேரூரில் 'அட்மா' திட்ட ஆலோசனை கூட்டம்
உத்திரமேரூரில் 'அட்மா' திட்ட ஆலோசனை கூட்டம்
உத்திரமேரூரில் 'அட்மா' திட்ட ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 18, 2025 10:58 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூரில், 'அட்மா' திட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில், வேளாண்மை தொழில்நுட்ப முகமை - 'அட்மா' திட்ட ஆலோசனை கூட்டம், வேளாண்மை உதவி இயக்குநர் முத்துலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது.
வட்டார தோட்டக்கலை அலுவலர் கோமதி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் லதா முன்னிலை வகித்தனர். அதில், வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான நுண்ணீர் பாசனம், கூட்டு பண்ணையம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
'அட்மா' திட்டத்தில் செயல்படுத்தப்படும் பயிற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் குமரவேல், மணிகண்டன் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.