ADDED : பிப் 12, 2024 06:11 AM
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணி தலைமையில் நடந்தது. பள்ளி மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
பல்வேறு விளையாட்டு, தனித்திறமை மற்றும் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற இப்பள்ளியை சேர்ந்த மாணவியருக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி கவுன்சிலர் ஷர்மிளா பரிசு வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கோமதி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியை ஆனந்தி நன்றி கூறினார்.
* உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஊராட்சி தலைவர் பிரதாப் தலைமையில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், பாட்டு, நடனம், விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழாசிரியர் அறிவழகன் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.