/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மனைவி தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவருக்கு 'ஆயுள்'மனைவி தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவருக்கு 'ஆயுள்'
மனைவி தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவருக்கு 'ஆயுள்'
மனைவி தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவருக்கு 'ஆயுள்'
மனைவி தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவருக்கு 'ஆயுள்'
ADDED : பிப் 11, 2024 12:28 AM
சென்னை:திருவண்ணாமலை மாவட்டம், காரையேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், 26; ஓட்டுனர். இவர், இலக்கியா என்பவரை காதலித்து, 2018ல் திருமணம் செய்தார்; சென்னை வேளச்சேரியில் வசித்தனர். அப்பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், இலக்கியா காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2019ல், இலக்கியா, தன் பெற்றோருக்கு பணம் கொடுத்துள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஜெயராஜ், இரவில் துாங்கிக்கொண்டிருந்த இலக்கியாவை கொலை செய்துள்ளார்.
பின், இலக்கியா துாக்கிட்டு தற்கொலை செய்ததுபோல் நாடகமாடி, மற்றவர்களை நம்ப வைத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து, இலக்கியாவின் வளர்ப்பு தாயின் புகாரை விசாரித்த கிண்டி போலீசார், ஜெயராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணை, அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக் முன் நடந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ''ஜெயராஜ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஆயுள் தண்டனையும், 12,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
''அபராதத் தொகையில் 10,000 ரூபாயை, இறந்த இலக்கியாவின் வளர்ப்பு தாயிடம் வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.