/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ யதோக்தகாரி கோவிலில் நாளை பிரம்மோத்சவம் யதோக்தகாரி கோவிலில் நாளை பிரம்மோத்சவம்
யதோக்தகாரி கோவிலில் நாளை பிரம்மோத்சவம்
யதோக்தகாரி கோவிலில் நாளை பிரம்மோத்சவம்
யதோக்தகாரி கோவிலில் நாளை பிரம்மோத்சவம்
ADDED : மார் 20, 2025 08:27 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், நடப்பாண்டு பங்குனி மாத பிரம்மோத்சவம், நாளை, காலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தொடர்ந்து சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் யதோக்தகாரி பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.
மூன்றாம் நாள் உத்சவமான மார்ச் 24ம் தேதி, காலை, கருடசேவை உத்சவமும், ஏழாம் நாள் பிரபல உத்சவமான தேரோட்டம் வரும் 28ம் தேதி காலை நடைபெறுகிறது.
வரும் 30ம் தேதி தீர்த்தவாரியும், மார்ச் 31ம் தேதி வெட்டிவேர் சப்பரத்துடன், 10 நாள் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை நல்லப்பா பாஷ்யகாரர் திருவம்சத்தார், பரம்பரை தர்மகர்த்தா நல்லப்பா நாராயணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.