/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அழகர் பெருமாள் கோவிலில் சித்திரை பவுர்ணமி விமரிசை அழகர் பெருமாள் கோவிலில் சித்திரை பவுர்ணமி விமரிசை
அழகர் பெருமாள் கோவிலில் சித்திரை பவுர்ணமி விமரிசை
அழகர் பெருமாள் கோவிலில் சித்திரை பவுர்ணமி விமரிசை
அழகர் பெருமாள் கோவிலில் சித்திரை பவுர்ணமி விமரிசை
ADDED : மே 13, 2025 12:59 AM

ஸ்ரீபெரும்புதுார் :ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், அழகூர் கிராமத்தில் அழகர் பெருமாள் கோவில் உள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்தாண்டு சித்திரை பவுர்ணமி விழா நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு அழகர் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் அபிசேகம் நடந்தது. 7:00 மணிக்கு அழகர் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதை தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு வீதியுலா சென்று அருள்பாலித்தார்.
மாலை 7:00 மணிக்கு விஜயநகர அழகர் குளத்தில், அழகர் பெருமாளின் தெப்ப உற்சவம் நடந்தது. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.