/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று, 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று, 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி
பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று, 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி
பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று, 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி
பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று, 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி
ADDED : மே 13, 2025 08:32 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை 2024 - -25ம் ஆண்டில், பிளஸ் 2 வகுப்பு முடித்த சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்கள், நலத்துறை பள்ளி மாணவர்கள், ஒற்றை பெற்றோருடைய மாணவர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, கல்லுாரியில் சேர்க்கை பற்றிய தகவல்கள், பல்வேறு தொழில் பாதைகள், கல்வி கடன்கள் பெறுதல் மற்றும் தனித்துவமிக்க ஆலோசனைகள் வழங்க, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
'கல்லூரி கனவு' என்ற இந்த நிகழ்ச்சி, மாவட்ட அளவில் இரண்டு கட்டங்களாக நடத்தபட உள்ளது.
முதற்கட்டமாக காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய பள்ளி மாணவர்களுக்கு, இன்று, காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை காஞ்சிபுரம், மீனாட்சி மருத்துவ கல்லுாரியிலும், இரண்டாம் கட்டமாக ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய பள்ளி மாணவர்களுக்கு, நாளை மறுதினம், ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியிலும் நடைபெற உள்ளது.
உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள், தமிழ் புதல்வன், புதுமைப்பெண், ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக், அறிவியல் மற்றும் கலைக்கல்லுாரி, பொறியியல் கல்லுாரி மற்றும் நர்சிங் கல்லுாரி சார்பில், விளக்க அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
'கல்லுாரி கனவு' நிகழ்ச்சியில், பிளஸ் 2 முடித்த பள்ளி மாணவர்களும் பங்கேற்று, உயர் கல்வியில் சேர்ந்து பயன்பெறும் வகையில், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என, காஞ்சிபுரம் கலெக்டர் கலச்செல்வி தெரிவித்துள்ளார்.