/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சி குமரக்கோட்டத்தில் தவன உற்சவம் நிறைவுகாஞ்சி குமரக்கோட்டத்தில் தவன உற்சவம் நிறைவு
காஞ்சி குமரக்கோட்டத்தில் தவன உற்சவம் நிறைவு
காஞ்சி குமரக்கோட்டத்தில் தவன உற்சவம் நிறைவு
காஞ்சி குமரக்கோட்டத்தில் தவன உற்சவம் நிறைவு
ADDED : பிப் 25, 2024 02:25 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும், மாசி மகத்தையொட்டி மூன்று நாட்கள் தவன உற்சவம் நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டு உற்சவம், கடந்த 21ல் துவங்கியது.
உற்சவத்தையொட்டி, தினமும், இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன், முருக பெருமான் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் உலா வந்தார்.
தொடர்ந்து, கோவில் கந்தபுராண மண்டபத்தில், நறுமணம் கமழும் குளிர்ச்சி நிறைந்த, தவன அலங்கார பந்தலில் எழுந்தருளிய முருக பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று, மாசி மகம் உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில், மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.