Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திருமுறை திருப்புகழ் இன்னிசை இலவச பயிற்சி வகுப்பு

திருமுறை திருப்புகழ் இன்னிசை இலவச பயிற்சி வகுப்பு

திருமுறை திருப்புகழ் இன்னிசை இலவச பயிற்சி வகுப்பு

திருமுறை திருப்புகழ் இன்னிசை இலவச பயிற்சி வகுப்பு

ADDED : மார் 18, 2025 08:48 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கீரை மண்டபம், வளத்தீஸ்வரரன் கோவில் தெருவில் உள்ள அறம்வளத்த ஈஸ்வரர் கோவிலில் திருமுறை திருப்புகழ் இன்னிசை இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.

வாரந்தோறும் சனிக்கிழமை, மாலை 6:00 மணி முதல், 7:30 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இதில், சீர்காழி திருஞான கதிர்வேல் சுப்பிரமணிய ஓதுவார், திருமுறை திருப்புகழ் இன்னிசை பயிற்சி அளிக்கிறார். இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சி முகாமில் ஐந்து வயது முதல், 50 வயது வரை ஆர்வம் உள்ள அனைவரும் பங்கேற்கலாம்.

பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு 79047 58735, 95663 66742 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us