/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாத் சின்னசாமி நகரில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு வாலாஜாபாத் சின்னசாமி நகரில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
வாலாஜாபாத் சின்னசாமி நகரில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
வாலாஜாபாத் சின்னசாமி நகரில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
வாலாஜாபாத் சின்னசாமி நகரில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
ADDED : செப் 22, 2025 12:49 AM

வாலாஜாபாத்;வாலாஜாபாத் சின்ன சாமி நகரில், பொது இடத்தில் குப்பை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
வாலாஜாபாத் பேரூரா ட்சி, 2வது வார்டில் சின்னசாமி நகரில் சிறுவர் பூங்கா மற்றும் நாராயண பெருமாள் கோவில் உள்ளது.
இப்பூங்கா மற்றும் நாராயண பெருமாள் கோவில் எதிரே பேரூராட்சிக்கு சொந்தமான பொது இடம் உள்ளது.
இந்த இடத்தில், சுற்றியுள்ள வியாபாரிகளும், அப்பகுதியினரும் இஷ்டம்போல் குப்பை கொட்டி வருகின்றனர்.
இந்த குப்பை கழிவுகளில் காய்கறி மற்றும் இறைச்சி கழிவுகளும் கலந்திருப்பதால், துர்நாற்றம் வீசுகிறது.
மழை நேரங்களில் நாற்றம் தாங்க முடியாமல், இச்சாலையில் நடந்து செல்வோர் முகம் சுளிக்கின்றனர். தொற்று நோய் ஏற்படுமோ என அச்சம் அடைகின்றனர்.
எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலான குப்பை கழிவு களை அகற்றுவதோடு, அப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.