/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பழவேரி அரிசி ஆலையில் இருந்து வெளியேற்றும் கழிவால் சுகாதார சீர்கேடு பழவேரி அரிசி ஆலையில் இருந்து வெளியேற்றும் கழிவால் சுகாதார சீர்கேடு
பழவேரி அரிசி ஆலையில் இருந்து வெளியேற்றும் கழிவால் சுகாதார சீர்கேடு
பழவேரி அரிசி ஆலையில் இருந்து வெளியேற்றும் கழிவால் சுகாதார சீர்கேடு
பழவேரி அரிசி ஆலையில் இருந்து வெளியேற்றும் கழிவால் சுகாதார சீர்கேடு
ADDED : மே 27, 2025 11:28 PM

பழவேரி:பழவேரி கிராமத்தில் இருந்து, பினாயூர் மலையடிவாரம் வழியாக திருமுக்கூடல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், ராமகிருஷ்ணமடம் அடுத்து தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்படுகிறது.
இந்நிலையில், அரிசி ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் உமி மற்றும் சாம்பல் போன்ற கழிவு, அப்பகுதியை சுற்றி உள்ள விவசாய நிலங்களில் பரவுவதாகவும், இதனால், சாகுபடி பயிர்கள் மற்றும் விவசாய நிலங்களின் மண் வளம் பாதித்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
மேலும், அரிசி ஆலையில் இருந்து வெளியற்றும் கழிவு உள்ளிட்ட குப்பை அப்பகுதி சாலையோரத்தில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு சாலையில் நடந்து செல்வோர் முகம் சுளிக்கின்றனர்.
எனவே, இப்பகுதியில் விவசாயம் மற்றும்சுகாதார சீர்கேடு ஏற்படாதவகையில் அரிசி ஆலை செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.