/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அஞ்சல், தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் அஞ்சல், தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
அஞ்சல், தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
அஞ்சல், தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
அஞ்சல், தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
ADDED : ஜூன் 20, 2025 02:27 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட தலைமை அலுவலகம் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வு துறை காஞ்சிபுரம் சரக பராமரிப்பு அலுவலகம் சார்பில், காஞ்சிபுரத்தில் நேற்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை சார்பில், 11வது சர்வதேச யோகா தினம், காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் வளாகத்தில் நடந்தது.
இதில், சங்கரமடத்தின் ஆஸ்தான யோகா ஆசிரியர் சத்யநாராயணன், சர்வதேச யோகா தின பயிற்சிகளான மூச்சு பயிற்சி, ஆசனம், பிராணாயாமம் உள்ளிட்ட 20 வகையான யோகாசனம் செய்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு எளிய முறையில் யோகாசனம் பயிற்றுவித்தார்.
இதில், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ், இந்திய தொல்பொருள் ஆய்வு துறை காஞ்சிபுரம் சரக பராமரிப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் இரு துறையை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.