ADDED : மார் 17, 2025 11:43 PM

காஞ்சி பஸ் நிலையத்தில் பள்ளத்தால் விபத்து அபாயம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, ஹாஸ்பிட்டல் சாலை,கிழக்கு ராஜ வீதி, அன்னை இந்திரா காந்தி செல்வோர் மணிக்கூண்டு ஒட்டியுள்ள சாலை வழியாக சென்றுவருகின்றனர்.
இந்நிலையில், மணிக்கூண்டு அருகில், சாலையோரம் இரண்டரை அடி விட்டமும், ஒரு அடி ஆழமும் உள்ள பள்ளம் ஒன்று உள்ளது.
சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பாதசாரிகளும், பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சாலையோரம் உள்ள பள்ளத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.ஜெயச்சந்திரன்,
காஞ்சிபுரம்.