Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி அருங்காட்சியக மேம்பாட்டு பணி ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடிப்பு

காஞ்சி அருங்காட்சியக மேம்பாட்டு பணி ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடிப்பு

காஞ்சி அருங்காட்சியக மேம்பாட்டு பணி ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடிப்பு

காஞ்சி அருங்காட்சியக மேம்பாட்டு பணி ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடிப்பு

ADDED : செப் 25, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில், உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி, ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் முடிக்காமல், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர்.

நவீன முறை காஞ்சிபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகம், 1999ல், அப்போதைய கலெக்டர் இறையன்புவால், காஞ்சிபுரம் எம்.எம்., அவென்யூவில், வாடகை கட்டடத்தில் துவக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

நிர்வாக காரணங்களுக்காக, 2017ல், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான, 'ஹோட்டல் தமிழ்நாடு' வளாகத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டது.

தற்போது அருங் காட்சியகம் செயல்பட்டு வரும் இடம் குறுகலாக உள்ளதால், விசாலமான இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, அருங்காட்சியக இயக்குநரகம் சார்பில், இடம் தேர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒலிமுகமதுபேட்டையில், 11,000 சதுர அடியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அருங்காட்சியகம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கியது.

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவுரையின்படி, அருங்காட்சியக பொருட்களை நவீன முறையில் காட்சிப்படுத்தும் வகையில், காட்சி அரங்குகள், மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை பொதுப் பணித் துறையினர் செய்து வந்தனர்.

இந்நிலையில், அருங்காட்சியகம் இடமாற்றம் செய்யப்பட உள்ள கட்டடத்தில் ஒரு மாதமாக உட்கட்டமைப்பு பணிகள், மந்தகதியில் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

வலியுறுத்தல் கடந்த ஆண்டு பிப்ர வரியில் துவங்கிய பணிகள், நடப்பு ஆண்டு ஜனவரியில் முடி த்திருக்க வேண்டும்.

ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பணிகள் மு ழுமை பெறாமல் உள்ளன.

எ னவே, புதிய அருங்காட்சியக பணிகளை விரைந்து முடித்து பயன்பாட் டிற்கு கொண்டுவர வேண்டும் என, காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டையில், புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ள அரசு அருங்காட்சியக கட்டடத்தில், கட்டுமான பணி முடிந்துள்ளது.

அருங்காட்சியக பொருட்களை காட்சிப்படுத்துதல், அதற்கான விளக்க லேபிள், விளக்கப்படங்கள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் இறுதியிலோ அல்லது நவம்பர் முதல் வாரத்திலோ பணிகள் முடிந்து, அரசு அருங்காட்சியகம் இடம் மாற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us