/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பயனாளிகளுக்கு கூரையின்றி காஞ்சிபுரம் ரேஷன் கடைபயனாளிகளுக்கு கூரையின்றி காஞ்சிபுரம் ரேஷன் கடை
பயனாளிகளுக்கு கூரையின்றி காஞ்சிபுரம் ரேஷன் கடை
பயனாளிகளுக்கு கூரையின்றி காஞ்சிபுரம் ரேஷன் கடை
பயனாளிகளுக்கு கூரையின்றி காஞ்சிபுரம் ரேஷன் கடை
ADDED : பிப் 01, 2024 11:10 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஆலடிபிள்ளையார் கோவில் தெருவில் இயங்கும் ரேஷன் கடையில், 810 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கார்டின் தன்மைக்கேற்ப அரிசி, சர்க்கரை, கோதுமை, சமையல் எண்ணெய், மண்ணெய்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ரேஷன் கடைக்கு வருவோர், 'பில்' போட வரிசையில் நிற்கும் இடத்திலும், கூரை வசதி இல்லை. இதனால், வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது குளிர்காலம் முடிந்து, கோடை காலம் துவங்கி உள்ளது.
இதனால், வயதானவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள் வெயிலில் நீண்டநேரம் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதேபோல, மழைக்காலத்திலும் கார்டுதாரர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஆலடிபிள்ளையார் கோவில் தெரு ரேஷன் கடையில், கார்டுதாரர்கள் பில் போடும் இடத்தில் கூரை வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


