சங்கரா பல்கலையில் ஆய்வகம் திறப்பு
சங்கரா பல்கலையில் ஆய்வகம் திறப்பு
சங்கரா பல்கலையில் ஆய்வகம் திறப்பு
ADDED : செப் 24, 2025 10:35 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலையில், மொபைல் செயலி உருவாக்க ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மொபைல் செயலி உருவாக்க ஆய்வகத்தின் திறப்பு விழா நடந்தது.
பல்க லை சார்பு துணைவேந்தர் பேராசிரியர் வசந்தகுமார் மேத்தா வரவேற்றார். பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீனிவாசு தலைமை உரையாற்றினார். காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளையின் நிர்வா கி சேகர் சிறப்புரையாற்றினார். விழாவில் பாரத ஸ்டேட் வங்கி தலைவர் சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிதாக நிறு வ ப்பட்ட ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, மொபைல் பேங்கிங், வங்கிக்கான மேம்படுத்தப்பட்ட மொபைல் செயலி உருவாக்கம் மற்றும் மொபைல் பேங்கிங்கில் உள்ள பாதுகாப்பு அம்சம் குறித்து அவர் பேசினார். பல்கலை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.