Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பெரியாண்டவர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

பெரியாண்டவர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

பெரியாண்டவர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

பெரியாண்டவர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

ADDED : ஜன 20, 2024 11:17 PM


Google News
செவிலிமேடு, காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு திரவுபதியம்மன் கோவில் வழியாக பாலாற்றாங்கரை செல்லும் வழியில் புதிதாக பெரியாண்டவர், வாழ் முனீஸ்வரர், மதுரை வீரன் பொம்மி வெள்ளையம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோவில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.

இன்று, காலை 9:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசம் புறப்பாடு நடக்கிறது.

காலை 9:15 மணிக்கு மூலஸ்தான கோபுரம் மற்றும் பரிவார கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.

அதை தொடர்ந்து பெரியாண்டவர், வாழ் முனீஸ்வரர், மதுரை வீரன், பொம்மி, வெள்ளையம்மாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகமும், காலை 11:30 மணிக்கு மஹா அபிஷேகமும் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us